கம்பம் அருகே க. புதுப்பட்டியில் புதிய நூலகத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகத்தை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் ராமகிருஷ்ணன் திறந்து வைத்து வருகை பதிவேட்டில் கையழுத்திட்டு நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் புதுப்பட்டி பேரூர் திமுக செயலாளர் எம்.டி.எம்.பார்த்திபன் புதுப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி பாஸ்கரன் மாவட்ட அயலக அணித் தலைவர் தொழிலதிபர் கே.எம்.பி.எல்.ரவி.கம்பம் புதுப்பட்டி லைப்ரரி நூலகர் பிரதீபா உள்பட பலர் கலந்து கொண்டனர்