ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் நோய்களை பரப்பக்கூடிய தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றது இந்த நாய்கள் நோய்கள் தாக்கத்தினால் சொறி நாய்கள் போன்று பார்ப்பதற்கே அருவருக்கத்தக்க வகையில் சுற்றி தெரிகிறது
மற்றும் இந்த நாய்கள் மூலம் பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை கடித்து மருத்துவமனையில் நோயாளி பிரிவில் அதிகப்படியானோர் நாய் கடித்தவர்கள் உள்ளனர் இந்த நாய்கள் இன விருத்தி மூலம் இனப்பெருக்கமானால் கொரோனாவை விட மிகப்பெரிய ஆபத்தான கொடிய நோய் பரவ வாய்ப்புகள் உள்ளது
ஆகவே மாவட்ட நிர்வாகம் கவனம் கூர்ந்து இந்த நாய்களே அப்புறப்படுத்துமாறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்