கோவை
திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு…
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்…
விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக காரில் செல்லும் முதலமைச்சர் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் தொடர்ந்து அங்கிருந்து பெருந்துறை விஜயமங்கலத்தில் நடக்கும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் அதே பகுதியில் நடக்கும் திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து சாலை மார்க்கமாக சேலம் மாவட்டம் மேட்டூருக்கு செல்கிறார்..