கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரப்படுத்துவார்கள் என்ற 2021-ம் ஆண்டு திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும்
ஒப்பந்த முறையை ரத்து செய்து மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோவை மாநகராட்சியை கண்டித்து இன்று மூன்றாவது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணி நிரந்தரம் செய்யும் வரை அரசாணை 62-ன் படியும் மற்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படியும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,தொழிலாளர்களிடம் மாதா மாதம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய சம்பள ரசீதை வழங்க வேண்டும்,ESI மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும், மாவட்ட நிர்வாகம் ரூபாய் 770 சம்பளம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது மாநகராட்சி நிர்வாகம் 540 ரூபாய் மட்டுமே வழங்கி வருவதாகவும் இதன் ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டபோது எந்த விதமான பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்து இன்றைய தினமும் தொடர்ந்து போராட்டம் ஆனது நடைபெற்று வருகிறது.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர் அதனை தொடர்ந்து இன்று மூன்றாவது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றிலும் பேரிகேடுகள் அமைக்கப்பட்டு உள்ளது மேலும் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *