தேனி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் புதன்கிழமை சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 851 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 60.44 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரிய குளம் கே எஸ் சரவணக்குமார் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நகர் மன்ற தலைவர்கள் தேனி ரேணுப் பிரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் கம்பம் வனிதா நெப்போலியன் கூடலூர் பத்மாவதி லோகந்துரை பேரூராட்சி மன்ற தலைவர்கள் வீரபாண்டி கீதா சசி கம்பம் புதுப்பட்டி சுந்தரி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.