கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஸ்டான் மோர் எஸ்டேட் மாதா கோவில் சந்திப்பில் சாலை அகலப்படுத்தும் பணியின் போது அங்கிருந்து அகற்றப்பட்ட அறிவிப்புப்பலகை மற்றொரு பக்கம் சாலையோரத்தில் போடப்பட்ட நிலையில் பணி முடிந்ததும் உயர்மட்ட அறிவிப்பு பலகையை அமைக்காமல் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு சிறிய அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளது
இதனால் அவ்வழியாக சென்றுவரும் சுற்றுலா பயணிகள் பெரும் பாலும் பாதை மாறி வனவிலங்குகள் அதிகளவில் நடமாடும் குரங்கு முடி எஸ்டேட் பகுதிக்கு சென்று விடுகின்றனர்
அதோடு அப்பகுதியில் நடமாடும் வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க மனித -வனவிலங்குகள் மோதல் தடுப்பு குழுவினரால் தடுக்கப்பட்டு வழிமாறி செல்லும் சுற்றுலா பயணிகளை தொடர்ந்து கண்காணித்து உரிய தகவல் அளித்து வருகின்றனர்
அதிலும் மாதா கோவில் சந்திப்பிலேயே இந்நிலை தொடர்வதால் கிடப்பில் போடப்பட்டுள்ள உயர் மட்ட அறிவிப்பு பலகையை மீண்டும் அமைத்து சுற்றுலா பயணிகளின் நலன் காக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்