திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வெள்ளாளர் தெரு பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ அங்காளம்மன் கோவிலில் நேற்று 10- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு முருக பக்தர்கள் வேல் பூஜை வழிபாடு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தாங்கள் கைகளால் முருகனின் வேலுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் திருவாரூர் ஸ்ரீ சங்கர நாராயண பீடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர தீர்த்த சுவாமிகள் ஆசி உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் சிறப்புரையாற்றினார். வருகின்ற ஜுன் 22- ஆம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு சம்பந்தமாக முன் பதிவு மற்றும் ஆலோசனை நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வலங்கைமான் ஒன்றிய இந்து முன்னணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.