பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

வலங்கைமான் ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி

திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி நடந்து வருகிறது.

முதல் நாள் பயிற்சியை வலங்கைமான் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சுகந்தி மற்றும் குமரேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பயிற்சிக்கான நோக்கங்களைப் பற்றி வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆசிரியரிடம் விளக்கினார்.

இப்பயிற்சியில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை அரும்பு , மொட்டு , மலர் என மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அம்மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியப் படங்களை கதை, பாடல், படித்தல் , எழுத்தல் ஆகியவை மூலமாக கற்பிப்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1, 2, 3 வகுப்புகளுக்கு 2022-23ஆம் ஆண்டில் இருந்து ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டிற்க்குள் அனைத்து தொடக்கப் பள்ளி மாணவர்களும் படித்தல் , எழுதுதுதலில், கணக்கீடு செய்தல் ஆகிவற்றில் குறிப்பிட்ட திறனை அடைய கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.

வலங்கைமான் ஒன்றியத்தில் நடைபெற்ற முதல் நாள் பயிற்சியில் 88 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துக் கொண்டு பயிற்சி பெற்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *