C K RAJAN Cuddalore District Reporter
9488471235..
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மகளிர் திட்டத்தின் வாயிலாக 1253 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.116.43 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடன் இணைப்புகளை வழங்கினர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான மணிமேகலை விருது மற்றும் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கி தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன்.மாநகராட்சி மேயர் .சுந்தரி ராஜா, மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன் அகியோர் முன்னிலையில் மகளிர் திட்டம் வாயிலாக 1253 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.116.43 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புகளை வழங்கினார்
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் அவர்கள் பொருளாதாரத்தில் மேன்மையடையும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் குறிப்பாக மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டம். மேலும் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு. புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 13,593 சுய உதவிக் குழுக்களும், நகர்புறங்களில் 4,122 சுய உதவிக் குழுக்களும் அமைத்து கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் சமூக பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று வருகின்றனர்.i
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஏழை எளிய மகளிரை கொண்டு மகளிர் குழுக்களுக்குi 2021-22 ஆம்i ஆண்டு 14,380 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 828.36 கோடி மதிப்பீட்டிலும், 2022-23 ஆம் ஆண்டு 17.268 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 1050.42 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 ஆம் ஆண்டு 21,464 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 1302 கோடி மதிப்பீட்டிலும், 2024-25 ஆம் ஆண்டு 23.246 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 1384.63 கோடி மதிப்பீட்டிலும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
2025-26 ஆம் ஆண்டிற்கு খ.1437.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டத்தில் இதுவரை 1649 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.127.29 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சுய உதவிக்குழுவை சார்ந்த 17542 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
இந்த நிதியை பயன்படுத்தி மகளிர்கள் தங்களின் வாழ்வாதாரமான விவசாயம் சார்ந்த மற்றும் விவசாயம் சாராத தொழில் நடவடிக்கைக்கு பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தையும், தங்களது குடும்ப வாழ்க்கை தரத்தினையும் செம்மைபடுத்தியுள்ளனர். மேலும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.50.00 இலட்சம் முதல் ரூ.100.00 இலட்சம் வரை வங்கி பெருங்கடனாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுய உதவிக் குழு உறுப்பினர்களை பணியாளர்களாக கொண்டு முதலமைச்சர் காலை உணவு திட்டம். இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் போன்ற பணிகளையும் திறம்பட செய்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சித் தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மரு. எஸ். அனு பயிற்சி ஆட்சியர் திருமதி மாலதி மாநகரட்சி மண்டல தலைவர் திருமதி.சங்கிதா.திட்ட இயக்குனர். மகளிர் திட்டம் ஜெயசங்கர். உதவி திட்ட அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.