கரூர் செய்தியாளர் மரியான் பாபு
திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தராத திமுக ஆட்சியை கண்டித்தும் மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தியும் கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கழக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அ
சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி தலைமையில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த நான்கு ஆண்டுகள் திமுக அரசு முடிவடைந்த நிலையில் கரூரில் நகராட்சிக்கு உட்பட்ட அம்மா திருமண மண்டபத்தில் வேளாண்மை கல்லூரி இயங்கிக் கொண்டு வருகிறது. ஆனால் இன்று வரை மாணவ, மாணவிகள் நலன் கருதி வேளாண்மை கல்லூரி கொண்டுவர முடியவில்லை. மணவாசி பகுதியில் வேளாண் கல்லூரிக்காக பூமி பூஜை போடப்பட்டு இன்றுவரை திமுக அரசால் கொண்டு வர வில்லை.
அந்த இடம் இந்து அறநிலைத்துறை சம்பந்தப்பட்ட இடம் உள்ளது.
இந்த நான்கு ஆண்டுகளில் திமுக ஆட்சி மக்களின் எந்த ஒரு திட்டங்களும் நிறைவேற்றப்படாமல் மட்டுமே உள்ளது. 512 வாக்குறுதிகளை வழங்கிய திமுக அரசு எந்த ஒரு நடைமுறையும் இல்லாமல் கண்துடைப்புக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் விவசாய வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவிகள் இறுதி ஆண்டு முடியும் நிலையில் கல்லூரி இல்லாத ஒரு நிலை என மாபெரும் கண்டன கோஷங்களை ஏராளமானத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்டனர்.