கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார் கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டார செயலாளர் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும்பொழுது
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இயற்கைச் சூழலைச் சீர்கேடிலிருந்து பாதுகாக்கும் செயல்முறையாகும். இது இயற்கையின் நன்மைகளை பேணுவதோடு மனிதனின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும். இது காலநிலை மாற்றங்கள், வள மோதல்கள், நிலம், நீர் மற்றும் காற்று மாசுபாடு போன்ற பல சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மனித சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கும் ஒரு முக்கியமான செயல்முறையாகும். இதற்கான முயற்சிகளில் அனைவரும் பங்களிப்பதன் மூலம், நமது பூமியை காப்பற்ற முடியும். சுற்றுச்சூழலை பாதுகாக்க நம்மால் முடிந்தவரை பொதுப் போக்குவரத்தையோ அல்லது நடைப்பயிற்சி மிதிவண்டியையோ பயன்படுத்துங்கள்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவக்கூடிய ஒரு வழி, காரை ஓட்டுவதற்குப் பதிலாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது, இது கார்பன் தடத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

நீங்கள் எடுக்கக்கூடிய மற்றொரு படி, ஒரு மரத்தை நட்டு அதைப் பராமரிப்பது. வருடத்திற்கு ஒரு மரத்தை நடுவது சுற்றுச்சூழலுக்கு பங்களிக்கும் ஒரு எளிய வழியாகும். என்று பேசினார். நிறைவாக ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சிந்தியா நன்றி கூறினார்.இந்நிகழ்வில் ஆசிரியர் நிவின், ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *