மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஏழைகளின் சுற்றுலா தளமாக அமைந்துள்ள குற்றாலம் ஆனது தற்போது சீசன் தொடங்கிய நிலையில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது அதை போல் சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகமாக உள்ளது பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் குளிக்க தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் அருவிகளை பார்த்தவாறு புகைப்படம் எடுத்தும் திரும்பி செல்வது வாடிக்கையாக உள்ளது தற்போதைய சீசன் குறிப்பிட்ட தினங்களுக்கு முன்பாகவே தொடங்கியதால் இப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்படும் வண்ணம் உள்ளது அதனை சரி செய்ய மாவட்ட காவல்துறை சிறந்த ஏற்பாடுகளையும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
குற்றாலம் பகுதிகளில் உள்ள அருவிகளான பிரதான அருவி பழைய குற்றாலம் ஐந்தருவி புலி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சீசனில் மட்டும் கிடைக்கக்கூடிய அரிதான பல வகைகளான ரம்டான் மங்குஸ்தான் ஸ்டார் பழம் அனைத்து வகையான காட்டுப் பழங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இப்ப பழங்களை சுவைத்து செல்வது வாடிக்கையாக உள்ளது.