முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வாழ்த்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்டேன் பொன்னுசாமி – சத்யாபாமாமா (முன்னாள் ஊராட்சி குழு தலைவர்) தம்பதிகளின் மகனான கிருஷ்ணா-நிவேதா திருமண வரவேற்பு நிகழ்வு மூலனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் பங்கேற்று மணமக்கள் 16 செல்வங்களைப் பெற்று நீடூடி வாழ வேண்டும் என்று மனநிறைவோடு வாழ்த்தினர். இந்த நிகழ்வில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்‌பி.வேலுமணி திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசாமி, என்.எஸ்.நடராஜன், பரமசிவம், உட்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் என பலர் பங்கேற்றனர்.

முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி வருகையை யொட்டி எம்ஜிஆர் ஜெயலலிதா வேடமிட்டவர்கள் காளிபாளையம், கொளத்துப்பாளையம், கரையூர், மூலனூர், போன்ற முக்கிய ஊர்களில் இபிஎஸ்ஐ வரவேற்க அமர வைக்கப்பட்டிருந்தனர். நீண்ட நேரமாக எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமிட்டவர்கள் எடப்பாடி பழனிச்சாமி வருகை காத்திருந்தனர். மேலும் மண்டபத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமியை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துக் கொண்டும் ஆரவாரம் செய்தனர். அதனை தொடர்ந்து மணமக்களை எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்திய போது தொண்டர்கள் எடப்பாடியுடன் போட்டோ எடுப்பதற்கு முண்டியடித்துக் கொண்டு மணமேடைக்குச் சென்றனர். அவர்களை பவுன்சர்கள் அங்கும் இங்கும் என தள்ளி விட்டனர். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அதன் பிறகு இரவு உணவு அருந்திவிட்டு எடப்பாடி பழனிச்சாமி திருமண நிகழ்வில் இருந்து சேலம் எடப்பாடிக்கு புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *