திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 13 லட்சம் மதிப்பிலான எக்கோ கார்டியோகிராம் கருவியை ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட கருவியை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார் .

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவிற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் ரூபாய் 13 லட்சத்து 10 ஆயிரத்து 64 ரூபாய் மதிப்பில் புதிய எக்கோ கார்டியோகிராம் கருவி வழங்கப்பட்டுள்ளது . இந்த கருவியினை இன்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மருத்துவக் கல்லூரி பொறுப்பு முதல்வர் ராஜேந்திரன், ஓஎன்ஜிசி சி ஜி எம் கிரிராஜ் டிமான், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *