காஞ்சிபுரம் ஏனத்தூர் சங்கரா பன் நோக்கு மருத்துவமனை மற்றும் ஐ ஐ டி மெட்ராஸ், ஹூண்டாய் பௌண்டேசன் மற்றும் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆப் தமிழ்நாடு ஆகியவை இணைந்து நடத்திய பெண்கள், ஆண்களுக்கு இலவச புற்றுநோய் கண்டறிதல் மற்றும்
கர்பிணி பெண்களுக்கான சிறப்பு ஆலோசனை முகாம் ஏனத்தூர் சங்கரா பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமை சங்கரா பன்னோக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.பி விஜயலட்சுமி மற்றும் மேனேஜிங் டிராஸ்டி எஸ். விஸ்வநாதன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் பெண்களுக்கான இரத்த அழுத்தம் சர்க்கரை அளவு ஹீமோகுளோபின் இரத்த அளவு, கண் பரிசோதனை, யூரின் ஆல்புமின், மாதவிடாய் பிரச்சனைக்கான ஆலோசனை, மார்பகம் மற்றும் கர்ப்பப்பை பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கான கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கான இருதய துடிப்பு பரிசோதனை, இசிஜி, எக்கோ, சுகப்பிரசவத்திற்கான எளிய உடற்பயிற்சிகளை இலவசமாக கற்றுத் தந்து ஆலோசனை, ஆண்களுக்கான வாய் மற்றும் மற்ற பாகங்களில் உள்ள கட்டிகள் பற்றிய சந்தேகங்கள் மற்றும் ஆலோசனை, ஆணுறுப்பு விதைப்பை கட்டிகள் பரிசோதனை ஆகியவை இலவசமாக செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் காஞ்சிபுரம், ஏனாத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.