அலங்காநல்லூர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சிக்கந்தர்சாவடி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கிட்டு தலைமை தாங்கினார். அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் சையது மன்சூர் உசேன், மற்றும் தென் மாவட்ட பொறுப்பாளர் பாஸ்கரன், கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி மற்றும் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களை சமூக ஊடகங்களில் அவருக்கு எதிராக கருத்து பதிவு செய்பவர்களை கண்டிக்கிறோம்.

நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் பேச்சை மீறி செயல்படும் பாமக பொறுப்பாளர்கள் யாராக இருந்தாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்கவில்லை என்றால் அவர்களை அடிப்படை உறுப்பினரிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும், அலங்காநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலை கடந்த பல ஆண்டுகளாக இயங்கவில்லை அவற்றை தாமதம் இன்றி உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உசிலம்பட்டிமருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ பிரிவில் கவனக்குறைவாக மருத்துவம் நடைபெறுகிறது.

இதில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அலங்காநல்லூர் ஒன்றிய தலைவர் தீரன் பாஸ்கரன், முன்னாள் மாவட்ட தலைவர் எரம்பட்டி அழகுராஜா, மாவட்டத் துணைத் தலைவர் பிரபு,
முடுவார்பட்டி ஊராட்சி கிளை செயலாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *