தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பெரியகுளம் நகர் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நகரத் தலைவர் திவ்யா ராஜசேகர் தலைமையில் மற்றும் மாவட்ட செயலாளர் ஒச்சா தேவர் முன்னிலை நகர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகிற ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மகாநாட்டிற்கு அதிக அளவில் முருக பக்தர்கள் மற்றும் தொண்டர்களை அழைத்துச் செல்வது என தீர்மானிக்கப்பட்டது
மேலும் நகரில் திருக்கோவில் மற்றும் முக்கிய வீதிகளில் முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் பாலு பாராளுமன்ற முழு நேர ஊழியர் முருகன் வழக்கறிஞர் சன்னாசி பாபு மூத்த நிர்வாகி குணசீலன் முன்னாள் தலைவர் முத்துப்பாண்டி மண்டல துணைத் தலைவர்கள் நாராயணன் ரமேஷ் சேகர் பாலசுப்பிரமணியம் மண்டல பொதுச் செயலாளர் சோமசுந்தரம் சரவணன் வீரபத்திரன் மண்டல பொருளாளர் ராஜசேகர் முன்னாள் மண்டல பொதுச் செயலாளர் பாலச்சந்திரன் நகர் நிர்வாகிகள் பாலசுப்ரமணி பழனிச்சாமி மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.