மதுரையில் தடுப்புச்சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசு பஸ்……..
கோவையில் இருந்து மதுரை – வழியாக ராமநாதபுரத்திற்கு , ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது இந்த பஸ்சில் 25-க்கும் மேற்பட்ட வர்கள் பயணித்தனர். இந்த பஸ்சை லட்சுமணன் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் இந்த அரசு பஸ் மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. சிக்னல் அருகே வந்தபோது கட்டுப்பாடிழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். அவர்க ளுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், சாலையில் கவிழ்ந்த அரசு பஸ்சை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக கரிமேடு போக்குவரத்து புல னாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.