மேம்பாலத்தில், முறிந்து விழுந்த மரக்கிளையால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவொற்றியூர், மணலி, ஆர்.கே., நகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், மாட்டு மந்தை மேம்பாலம் உள்ளது. தினந்தோறும், இந்த மேம்பாலத்தில் வழியாக ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,, திடீரென மேம்பாலத்தின் பக்கவாட்டில் வளர்ந்திருந்த, ராட்சத மரத்தின் கிளை முறிந்து மேம்பாலத்தில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு சம்பவ இடத்தில் முகாமிட்டு, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில், திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மரம் வெட்டும் இயந்திரங்களை பயன்படுத்தி, மரக்கிளைகளை அகற்றினர். பின் போக்குவரத்து சீரானது.