தருமபுரி மாவட்ட காவல்துறையில் காவல் ஆய்வாளர்கள் முதல் காவல் கண்காணிப்பாளர் வரை பல்வேறு பிரிவுகளில் பயன்படுத்தப்படும், இருசக்கர வாகனங்கள், ஜீப், சுமோ, சிறிய மற்றும் பெரிய பேருந்துகள் என 100-க்கும் மேற்பட்ட காவல் துறை வாகனங்களை தருமபுரி மாவட்ட எஸ்பி அலுவலக மைதானத்தில் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆய்வு செய்தார்.
இதில் ஒவ்வொரு வாகனங்களின் தரம், செயல்பாடுகள், சைரன், முகப்பு விளக்குகள், வாகனங்களுக்கான பிரேக், பழுதானால் பழுது நீக்குவதற்கான உபகரணங்கள், உள்ளிட்டவை சரியாக இருக்கின்றனவா என ஆய்வு செய்தார்.