சாலையோரம் தேங்கி நிற்கும் மணலை அகற்றும் இரண்டு இயந்திரம் மற்றும் மரம் கிளைகளை அகற்றும் மூன்று இயந்திரங்களை சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் மண்டலம் 1 ல் பயன்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட நிலையில் அவற்றினை திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் திமு தனி யரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டு துவக்கி வைக்கும் பணி நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-1 திருவொற்றியூர் பகுதிக்கு, சக்திமான் மரம் அகற்றும் இயந்திர வாகனம் மற்றும் சாலையில் உள்ள மண் அகற்றும் இயந்திர வாகனம் ஆகிய புதிய வாகனங்களை சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் வழங்கபட்ட மூன்று இயந்திர வாகனங்களை இந்தப் பகுதி பயன்பாட்டுக்காக
திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் புதிய இயந்திர வாகனங்களை, அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு மாநகராட்சி மண்டல குழு தலைவர், கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில்
திருவொற்றியூர் 1 வது மண்டல செயற் பொறியாளர் பாண்டியன், பாபு, மேற்பார்வையல்கள், தனபால் வேளாங்கண்ணி மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *