தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துசாமி பும் கிராமத்தில் பொது மக்கள் ரேஷன் கடை வேண்டி மார்க்கையன்கோட்டை பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் ஒ.ஏ. முருகன் மூலம் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பியிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை கனிவுடன் பரீசலித்த எம்பி அவர்கள் தனது பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்து ரேஷன் கடை கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது புதியதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்து கிராம மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் மார்க்கையன்கோட்டை பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் ஒ.ஏ.முருகன் சின்னமனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கன்னியம்பட்டி முருகேசன் உள்பட பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.