கொடைக்கானல் வட்டம், கே.சி.பட்டி ஊராட்சி கோரன் கொம்பு கிராமத்தில் வன உரிமைச் சட்டம்- 2006 சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி செயலர் ரெங்க ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கோரன் கொம்பு, குறவனாச்சி ஓடை. வெக்கடிக்காடு, குன்றுக்காடு, கள்ளக்கிணறு ஆகிய கிராமங்களின் பழங்குடி மக்களும், குட்வில் டார்ப் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், கிராமத் தலைவர்கள் சங்கர், முருகன், கோடைக்குறிஞ்சி பெண்கள் இயக்கத்தின் செயலாளர் மாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.