தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்
தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 232 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம், தாராபுரம் கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன் தலைமையில் நடைபெற்றது. வட்ட சட்டப் பணிக்குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சக்திவேல், ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜன், உரிமையியல் நீதிபதி பாண்டிமகாராஜா, குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி உமா மகேஸ்வரி மற்றும் வழக்கறிஞர் என்.பி. சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள்12, உரிமையியல் வழக்குகள் 47, குற்றவியல் சிறு வழக்குகள் 172, குடும்ப வன்முறை வழக்கு 1 என மொத்தம் 232 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்த மதிப்பு 14 கோடியே 5, லட்சத்து 65 ஆயிரத்து 917 ரூபாய் ஆகும். மேலும் வங்கி வாராக்கடன் வழக்கு 7. இதன் மதிப்பு 5 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 366 பயனாளிகள் பயன் பெற்றனர்.
இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்ப பணியினை வட்டச் சட்டப் பணிக்குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.