தஞ்சை புனித லூர்து அன்னை ஆலயம் ரூ.1 1/2 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது,
மறைமாவட்ட ஆயர் புனிதம் செய்து திறந்து வைத்தார்.
தஞ்சாவூர், ஜூன்- 15. தஞ்சாவூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த புனித லூர்து அன்னை ஆலயம் மருத்துவக்கல்லூரி சாலை மங்களபுரத்தில் உள்ளது. ஏறத்தாழ 50 ஆண்டுகளை கடந்த இந்த ஆலயம் ரூ.1 1/2 கோடி செலவில் கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில் ஆலய திறப்பு விழா மற்றும் புதிய பலி பீட அர்ச்சிப்பு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் டி.சகாயராஜ் தலைமை தாங்கி, புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை புனிதம் செய்தும் ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார். பி்ன்னர் அவர் கல்வெட்டையும் திறந்து வைத்தார். பெங்களூர் புனித பேதுரு குருத்துவக் கல்லூரி பேராசிரியர் எல்.சகாயராஜ் முன்னிலை வகித்தார்.
விழாவில் முன்னாள் பரிபாலகர் சகாயராஜ் மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் ஜெரால்டு வேந்தர் ஜோதி மற்றும் 80-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கலந்துகொன்டனர்.
முன்னதாக புனித லூர்து அன்னை ஆலய பங்குதந்தை மரியசூசை வரவேற்றார். பின்னர் பணிமாறுதலாகி செல்லும் உதவி பங்கு தந்தை அலெக்சாண்டருக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு குருக்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.