தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர். ஜுன்- 15. தமிழகத்தில் முதன்முறையாக இராமேஸ்வரம் வெட்டி வேர் மற்றும் கல்லணை வெட்டிவேர் தோட்டம் இணைந்து வெட்டி வேர் திருவிழா கல்லணை யில் நடைபெற்றது.
நிகழ்வில் வெட்டி வேரின் நன்மைகளை உலகறிய செய்து தமிழர்களின் பாரம்பரியத்தை உணர்த்துவதோடு தமிழகத்தின் தொன்மையான வெட்டி வேருக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
பூண்டி.வெங்கடேசன் வெட்டிவேர் பயன்கள் குறித்தும் அதை பயிரிடும் முறைகள் குறித்தும் விளக்கினார். ஒன்றிய அரசின் மருத்துவ மற்றும் நறுமண தாவர நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் கலைச்செல்வி. திருவனந்தபுரம் சி.எஸ்.ஐ.ஆர். இயக்குனர் அனந்த ராமகிருஷ்ணன். பொறியாளர் முருகானந்தம் வெட்டிவேர் விவசாயிகள். தொழில் முனைவோர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கல்லணையில் அமைந்திருக்கும் மன்னன் கரிகாலன் சிலைக்கு வெட்டிவேர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.