திருவெற்றியூர் சென்னை வடக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி குழு சார்பில் ராமநாதபுரத்தில் பகுதிக்குள் உறுப்பினர் அலமேலு தலைமையில் மக்கள் சந்திப்பு நடப்பயணம் முன்பாக டாக்டர் அம்பேத்கர் உறவு சிலைக்கு மாலை அணிவித்து சி பி ஐ எம் மாநில குழு உறுப்பினர் எல் சுந்தரராஜன் கொடி அசந்தி நடைப்பயணத்தை துவக்கி வைத்தார்
அவர் பேசும்போது அரசுக்அனைத்து மாநகராட்சிகளிலும் அபரிமிதமான சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இவை மக்களுக்கு தாங்க முடியாத சுமையாக உள்ளது. ஏற்கனவே ஒன்றிய அரசு கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி என வரி மேல் வரி போட்டு மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.
அதுபோல் மாநில அரசும் சொத்து வரியை உயத்தி மக்களை வதைக்கக் கூடாது. எனவே சொத்து வரி உயர்வை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அடுத்த மாதத்தில் இருந்து மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வரும் என்ற செய்தி வந்துகொண்டே இருக்கிறது. ஏற்கனவே மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.
மூன்று தலைமுறையாக வசிக்கும் ராமநாதபுரத்தில் வீட்டு மணி பட்டா வழங்க வேண்டும் வாக்குறுதியில் கூறியபடி மாத மாதம் மின் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநில அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை மின்சார தொழிலாளர் பிரச்சனை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எல் சுந்தர்ராஜன் கேட்டுக் கொண்டார்.
இதில் வடக்கு பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், பகுதி குழு உறுப்பினர்கள் கே வெங்கட் ஐயா சுரேஷ் பாபு சதீஷ் சுரேஷ் சேகுவாரா கேகே புஷ்பா ராமு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.