விருத்தாசலம்,
கடலூர் மேற்கு மாவட்ட திமுக விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கினார். மாநில சட்ட திருத்த குழு இணைச் செயலாளர் திட்டக்குடி தொகுதி தேர்தல் பார்வையாளர் சுபா சந்திரசேகர், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் அரியலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் குலோத்துங்கன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் பாவாடை கோவிந்தசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், செந்தமிழ் செல்வி கருப்புசாமி, விருத்தாசலம் நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, சுரேஷ் ஆசைத்தம்பி மங்கலம்பேட்டை நகர செயலாளர் செல்வம், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக நகர செயலாளர் தண்டபாணி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட ஆதி திராவிட நலக்குழு அமைப்பாளர் நகர துணை செயலாளர் ராமு நன்றி கூறினார்.
கூட்டத்தில் கழகத்தில் உறுப்பினர்கள் சேர்த்தல், கலைஞர் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, வருகின்ற 2026 இல் தமிழக முதல்வரின் ஆணையிட்டு சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி 200 க்கு 200 வெற்றி இலக்கை அடைய செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து அமைச்சர் பேசுகையில்
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், புகழ், மதிப்பு ஆகியவற்ற எண்ணிப் பார்க்கும்போது கட்சியினால் ஏற்பட்டது தான் ஆட்சி, ஆனால் ஆட்சி கட்சிக்காக அல்ல மக்களுக்கானது, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். ஒரு நாளில் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் நிலையான நிர்வாகம், சட்டம் ஒழுங்கு அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
புதிய உறுப்பினர்களை அதிகமாக சேர்க்க வேண்டும். நாடும் மக்களும் நன்றாக இருக்க வேண்டும். ஒரு மனு கொடுத்தால் என்னவென்று கேட்காத நாதியில்லாமல் இருந்த இந்த நாட்டில் தற்போது மனு கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி பொதுமக்களிடம் ஒவ்வொரு வீடாக சென்று ஆட்சியின் திட்டங்களை எடுத்துரைத்து 2026 ல் 200 க்கு 200 இடத்தைப் பிடிக்க வேண்டும் என கூறினார்
இதில் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சதீஷ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அருள்குமார், சரவணன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பூதாமூர் முத்து சுரேஷ், அறிவுடை நம்பி, டைலர் சிவா, சரவணன், தங்க அன்பழகன், இலக்கிய அணி பட்டி கருணாநிதி, ஒன்றிய துணை செயலாளர்கள் தர்ம மணிவேல், முத்துவேல், சாமி நகர துணை செயலாளர் நம்பிராஜன், மாவட்ட பிரதிநிதி ஆட்டோ பாண்டியன், பழனிச்சாமி, கம்மாபுரம் ஒன்றிய துணை செயலாளர் மகாலிங்கம், அறிவழகன், பன்னீர்செல்வம், விருத்தாசலம் வெங்கடாஜலபதி, பாலகிருஷ்ணன், மங்கலம்பேட்டை முகமது யூசுப், குழந்தை சுதந்திரன் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்