தாராபுரத்தில் ரூ.12.12 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு துவக்கமும், முடிவுற்ற திட்டங்களுக்கு திறப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டு துவங்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கன்னிவாடி மற்றும் மூலனூர் பேரூராட்சிகளில் ரூ.12.12 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன மற்றும் முடிவுற்ற திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், மற்றும் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு தலைமை வகித்தனர்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:துவக்கப்பட்ட திட்டங்கள்:
தார் சாலை அமைப்புகள்.புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடங்கள்.பள்ளி வகுப்பறை மற்றும் கழிப்பிடம் கட்டிடங்கள்.மழைநீர் வடிகால் அமைப்புகள்.சிமெண்ட் கான்கிரீட் சாலை சீரமைப்புகள் ஆகும் இதில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.8.50 லட்சம்
மாநில நிதிக்குழு, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், பள்ளி மேம்பாட்டு நிதி, பொதுநிதி, சிறப்பு நிதி என மொத்தமாக ரூ.12.12 கோடி ஆகும்.

அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியது:

“மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் கீழ், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுகின்றன. மகளிர் பேருந்து பயண திட்டம், கல்வி மற்றும் நலத்திட்டங்கள், விவசாய மின்சாரம் போன்ற பல திட்டங்கள் மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.” என தெரிவித்தார்.

இதில் திமுக மூலனூர் ஒன்றிய செயலாளர் துறை தமிழரசி பழனிச்சாமி பேரூர் கழகச் செயலாளர் மக்கள் தண்டபாணி ரேவதி சுரேஷ். முக்கிய நிர்வாகிகள் மோகன்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *