மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் பண்பொழி கிராமம் 1வது வார்டு திருமலை கோவில் சாலையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக 16 குடும்பங்கள் வீட்டு தீர்வை பெற்று வசித்து வருவதாகவும் தற்போது அப்பகுதியை நீர் நிலை புறம்போக்கு பகுதி என்று கூறி ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருவதாகவும் கோரி வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .
இக்கடிவத்தை பெற்ற இப்பகுதி மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதி குடும்பம் குடும்பமாக கடந்த 30 வருடமாக குடிந்து வருவதாகவும் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு அரசின் அனைத்து உதவித் திட்டங்களான மருத்துவ காப்பீடு திட்டங்கள் அனைத்தும் இந்த முகவரியிலேயே பெற்று தாங்கள் வசித்து வருவதாகவும் தங்களுடைய குழந்தைகள் இந்த முகவரியையே தன்னுடைய கல்வியின் அனைத்து ஆதாரங்களாக பயன்படுத்தி வருவதாகவும் நாங்கள் குடியிருக்கும் பகுதியை திடீரென காலி செய்யச் கூறும் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது
என்றும் இதனால் மிகுந்த மன உளைச்சலும் அடுத்த முடிவுகளை எடுப்பதற்கான செயல்பாடுகளில் தங்களால் முடியவில்லை என்றும் கூறி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இன்றைய மனுநீதி நாளில் நேரடியாக சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை அணுகி
கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
இதனால் ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.