திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அரசு பஸ் கிளை ஓட்டுநர் கணேஷ் தாக்குதல் விவகாரம் – மாரிமுத்துவை உடனடியாக கைது செய்ய கோரி 8.வது நாள் ஆர்ப்பாட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு பஸ் கிளை ஓட்டுநர் கணேஷை மதுரை ஆரப்பாளையத்தில் காலணியால் தாக்கியதாக கூறப்படும் மதுரை கிளை மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட ஐந்து அதிகாரிகள் கைது செய்யப்படாமல் எட்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தாராபுரம் நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தாராபுரம் கிளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை டிடிஎஸ்எப் மாநில பொதுச் செயலாளர் டி.வி. பத்மநாபன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்தனர் இதற்கிடையில், மதுரை நீதிமன்றம் மாரிமுத்து உள்ளிட்ட ஐந்து பேருக்கு முன் ஜாமின் வழங்க தடை விதித்திருந்தாலும், மதுரை ஆரப்பாளையம் காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100.க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கடுமையாக விமர்சித்தனர்.
மேலும், மாரிமுத்து உட்பட ஐந்து அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும், முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் இதுவரை எந்த விதமான கருத்தும் தெரிவிக்காதது குறித்து கண்டனக் கோஷங்களும் எழுப்பப்பட்டது.
“அறிவுறுத்தப்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்படும் வரை தொடர்ந்தும் போராட்டம் நடைபெறும்,” என தொழிற்சங்கத்தினர் உறுதிப்படையுடன் தெரிவித்துள்ளனர் இதில் சிஐடியு முனைப்பு மாவட்ட துணை பொதுச்செயலாளர் ராமசாமி.டிடிஎஸ்எப்
மண்டலத் தலைவர் இன்ப சேகர். உட்பட பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.