தேனியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி விளையாட்டு மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.06.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது

இந்த வேலை வாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு பணி இடங்களுக்கு வேலையில்லா வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர்

இந்த முகாமில் 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் கல்வித் தகுதி உடையவர்கள் 12 ஆம் வகுப்பு ஜடிஜ பட்டய படிப்பு இளநிலை பட்டப்படிப்புகள் நர்சிங் மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் தங்களது சுய விபர நகல் மற்றும் கல்வி சான்றிதழ்களின் அசல் நகல்களுடன் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெற்று பயன்பெறலாம் மேலும் விவரங்களுக்கு 7904706709 என்ற செல் நம்பரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்

இந்த வேலைவாய்ப்பினை தேனி மாவட்ட வேலை இல்லா வேலை தேடுபவர்கள் பயன்படுத்தி பயன்பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *