பாட்டாளி மக்கள் கட்சியின் திருவாரூர் செயலாளராக சேங்காலிபுரம் வேணு.பாஸ்கரன் நியமனம், பாமக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு.
திருவாரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளராக மூன்றாவது முறையாக குடவாசல் தாலூகா சேங்காலிபுரத்தைச் சேர்ந்த வேணு.பாஸ்கரனை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் எஸ்.இராமதாஸ் அவர்கள் நியமனம் செய்துள்ளார்.
இவர் வன்னியர் சங்க காலம் முதல் வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளராக இரண்டு முறை, தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில துணைச் செயலாளராகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும், மாநில துணைப் பொதுச் செயலாளராக இரண்டு முறை, இப்படி பாட்டாளி மக்கள் கட்சியில் பல பதவிகளை வகித்து, தற்போது மீண்டும் திருவாரூர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் வேணு. பாஸ்கரன் நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டம் கடைவீதியில் பாமக நிர்வாகிகள் வானவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் மாவட்ட கட்சியினர் அவரை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.