அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் சார்பில் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது மாவட்ட தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார் ஜோதிலட்சுமி விஜயா உஷாராணி குமுதா உமா சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநில தலைவர் ரத்தினமாலா கண்டன உரையாற்றினார்
சிஐடி யு மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி எல் ஐ சி கிருஷ்ணன் சிற்றம்பலம் சந்தானம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் ஒன்றிய செயலாளர் லதா அனைவருக்கும் நன்றி கூறினார்