தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் பள்ளி அருகே கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சர்ச் ரோட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரி சமூக விரோதிகள் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவு குப்பைகளை கொண்டுவந்து கொட்டி நோய் பரவும் அவல நிலையை உருவாக்கி வருகிறார்கள். இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறியதாவது:
தாராபுரம் சர்ச் ரோட்டில் பிரபல பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சிறு குழந்தைகள் முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.இந்த பள்ளியின் பிரதான நுழைவாயில் எதிரில் உள்ள பலர் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர்.
தற்பொழுது கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையிலும், மழைக்காலம் என்பதாலும் சமூக விரோதிகள் சிலர் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு பணம் பெற்றுக் கொண்டு அந்த குப்பைகளையும் மருத்துவக் கழிவுகளையும் கொண்டு வந்து பள்ளி எதிரில் சாக்கடையில் கொட்டி வருகின்றனர்.
எனவே அந்த குப்பைகளில் இருந்து ஏராளமான நோய்க் கிருமிகள் உருவாகி பள்ளி குழந்தைகளுக்கு நோய் பரப்பும் அவல நிலை உருவாகியுள்ளது.
இதுபோன்ற சமூக விரோதிகள் மீது திருத்தப்பட்ட நகராட்சிகள் சட்டப்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் தாராபுரம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும் என சமுக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.