கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு
மகாராஷ்டிரா நாக்பூரில் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ..
வருகின்ற 20,21,22 ஆகிய மூன்று தினங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் என்ற இடத்தில் தேசிய அளவிலான அண்டர்-15 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது
இப் போட்டியில் வெற்றி பெரும் மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் சர்வதேச அளவிலான ஏசியன் சாம்பியன்ஸ் போட்டிக்கு தேர்வாக உள்ளார்கள் இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் எம்.கனிஷ்கா, ரா.திவ்யேஸ், ஆ.சபரிகிரிஸன், த.மௌனீஸ் நான்கு மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.
இவர்களை பாராட்டும் வகையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மல்யுத்த வீரர் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தி தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வெல்வதற்கு நல்லாசி வழங்கினார்.
இவர்களுடன் கரூர் மாவட்டம் மல்யுத்த சங்க செயலாளர் மு. ஜகன் குமார், வெற்றிவேல் மல்யுத்த அகாடமி உரிமையாளர் கோ.மகேஷ்வரன் மற்றும் உடன் இருந்தனர்.