வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் ஜ என் டி யு சி சார்பில் சுதந்திரப் போராட்ட வீரரும், தியாக சீலருமான கக்கன்ஜி அவர்களின் 118- வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே காங்கிரஸ் தொழிற்சங்கம் ஜ என் டி யு சி சார்பில் சுதந்திர போராட்ட வீரரும், தியாக சீலருமான கக்கன்ஜி அவர்களின் 118- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் வலங்கைமான் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் கலியமூர்த்தி, வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர், மாணவிகள் ஆகியோர் கக்கன்ஜி யின் சாதனைகளைப் பற்றி பேசினார்கள். இவர் சுதந்திர போராட்ட வீரராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், வேளாண்மை துறை அமைச்சராகவும் இப்படி பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த செம்மலாகவும், எளிமையாகவும் வாழ்ந்து சாதித்த அவரின் சாதனைகளை போற்றி புகழ்ந்தனர். முன்னதாக வந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி எழுது பொருள்கள், உபகரணங்கள் வழங்கி தொழிற்சங்கம் திருவாரூர் மாவட்ட தலைவர் குலாம் மைதீன் அனைவரையும் வரவேற்றார்.