தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அருகே கல் கடத்தி வந்த லாரி பிடிபட்டது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள புங்கந்துறை பகுதியில் கல் மற்றும் மண் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து சங்கரண்டாம்பாளையம் வருவாய் ஆய்வாளர் ரெங்கநாயகி வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அப்பகுதி வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டார்.அதில் லாரியில் அனுமதியின்றி கல் ஏற்றி வந்த்து தெரியவந்தது. உடன் அதுகுறித்து ரெங்கநாயகி தாராபுரம் வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்துவிட்டு லாரியை ஊதியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மதுரை கஞ்சராயன் பட்டியை சேர்ந்த அய்யாவு மகன் சந்தானகிருஷ்ணன்(46) என்பதும் அதில் சுமார் 6 யூனிட் கல் உரிய அனுமதியின்றி ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.