கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக த.வெ.க.தலைவர் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரசி,மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது-தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிறந்த நாளை வரும் 22 ந்தேதி கொண்டாட உள்ள நிலையில்,கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக தேசிய பொது செயலாளர் ஆனந்த் அறிவுரைப்படி தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது..
இதன் தொடர்ச்சியாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை புறநகர் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது..
தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற இதில் புறநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாபு தலைமை வகித்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி,மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…
மந்திரி குமார், ரேஷ்மா ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட கழக நிர்வாகிகள் இணைச்செயலாளர் சபரி பொருளாளர் சரவணகுமார் துணை செயலாளர் மோகனப்பிரியா ராஜா செந்தில்குமார் வினோத் குமார் மாசாண முத்து பவித்ரா கௌசல்யா அவிலா கிரேசி கோமதி தவ்பிக் கார்த்தி காமராஜ் கலந்து கொண்டனர்…