திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் பரிதாபம்: 8ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை — செல்போன் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அய்யன் தோட்டம் பகுதியில் பரிதாபமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வரும் சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சித்தார்த் (வயது 13), தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.

சித்தார்த், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது தினமும் செல்போனில் விளையாடும் பழக்கத்தில் இருந்துள்ளான். இதனால் அவரது பெற்றோர் அடிக்கடி கண்டித்துவந்ததாக தெரிகிறது. இதுபோல் கடந்த நேற்றுவும் சித்தார்த் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பெற்றோர் அவனை உணவு சாப்பிட அழைத்துள்ளனர். ஆனால், சித்தார்த் அவர்களது சொற்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து செல்போனில் கவனம் செலுத்தி விளையாடி வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். இதை மனதில் எடுத்துக்கொண்ட சித்தார்த், வீட்டில் யாரும் இல்லாத வேளை பார்த்து அங்கிருந்த விவசாய பயன்பாட்டுக்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார்.

உடனே விஷம் குடித்த தகவல் பெற்ற பெற்றோர், சித்தார்தை அவசரமாக அலங்கியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சித்தார்த் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாராபுரம் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயசாரதி வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *