திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் : வீடு புகுந்து இரவு 10,000 ரொக்க பணம் திருட்டு — ஒரே நாளில் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா, ஆண்டிபுதூர் ஊதியூர் அஞ்சல் பகுதியில் உள்ள குறுக்குப்பாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணியின் மகன் சம்பத்குமார் (19) தனியார் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். திருமணம் ஆகாத இவர், கடந்த 17ம் தேதி இரவு திறந்திருந்த வீட்டினுள் சென்று பீரோவில் வைத்திருந்த ரூபாய் பத்தாயிரம் ரொக்க பணத்தை திருடியதாக

குண்டடம் சின்னாரி
பாளையம் தேவராஜ் பட்டினம்.பாலுமணியின் மகன் செல்வநித்திஸ் வயது 12. தந்தையிடம் தெரிவித்த புகாரி அடிப்படையில் குண்டடம் காவல் நிலையத்தில் தகவலை தெரிவித்தார் தகவலின் பேரில் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பத்குமார் இடம் விசாரணையில்.பணத்தில் சிக்கல் ஏற்பட்டதாலும், தனது தாயார் காஞ்சனாவுக்கு இருந்த கடன் தொல்லையை தீர்க்கவே இந்த திருட்டை செய்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் திருட்டு சம்பவம் குறித்த புகாரை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் சூரியநல்லூர் 3 ரோடு பகுதியில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.

பின்னர் போலீசார், ஆண்டிபுதூர் பகுதியில் நடத்திய சோதனையில் குற்றவாளி சம்பத்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4,500 பணம் மற்றும் TN 47 AV 2516 என்ற எண்ணுடைய பிளாக் கலர் பல்சர் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

சம்பத்குமாரை கைது செய்த போலீசார் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு தாராபுரம் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி உமா மகேஸ்வரி முன்னிலையில் ஆஜர் படுத்தி தாராபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

குண்டடம் போலீசாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *