செங்குன்றம் செய்தியாளர்
கொளத்தூர் ,ரெட்டேரி வினாயகபுரம் வழியாக செங்குன்றம் செல்லும் மாநகர பேருந்து கதிர்வேடு பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாமல் பயணிகள் கடும் வெயிலால் நிழற்குடை நிறுத்தம் இல்லாமல் அவதியடைந்து வந்த நிலையில், பொதுமக்கள் காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபுவிடம் நிழற்குடை அமைத்து தர கோரிக்கை வைத்தனர்.
இதனை கருத்தில் கொண்ட மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 18 லட்சம் ரூபாய் செலவில் புதிய நிழற்குடை அமைத்து பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு அதனை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ராஜிவ்காந்தி பிறந்தநாளில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
முன்னதாக ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகளும் ,காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது .
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பேசிய போது வருங்கால பாரத பிரதமர் ராகுல் காந்தி நீடூழி வாழ வாழ்த்தியும், மக்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இளம் தலைவர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாரத பிரதமராக ஆவார் என தெரிவித்தார்.
இதில் மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு , நாடாளுமன்ற பொறுப்பாளர் ஏஜி. சிதம்பரம் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் தலைவர் ரமேஷ் ,சர்க்கில் தலைவர் வெங்கடேசன் மாதவரம் வெங்கடேசன், சந்துரு புழல் குபேந்திரன் தெற்கு மாவட்ட துணை தலைவர் பாபு மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.