செய்தியாளர் வீ. சக்திவேல். 9080674890

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலார் பிறந்த இல்லம் இருக்கிறதுவாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எல்லா உயிர்களுக்கெல்லாம் ஜீவகாருண்யம் போதித்த ராமலிங்க சுவாமி வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம் பல ஆண்டுகளாக இப்பகுதியில் செயல்பட்டு வந்தது.
வள்ளலார் பிறந்த இல்லம் முழுவதுமாக சேதம் அடைந்தது. இக்கோவிலுக்கு
வெளி மாநில, வெளி மாவட்ட பக்தர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து வழிபாடு செய்து வந்த நிலையில் திருக்கோயில் மிகவும் சேதம் அடைந்ததை நிலையை முன்னாள் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அரசு கொரடாவும் ஆகிய திமுக ஆதிதிராவிடர் நல மாநில தலைவருமான மருதூர் இரா. ராமலிங்கம் அவர்களின் தொடர் முயற்சியால் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்களின் தனி கவனத்திற்கு எடுத்துச் சென்றதின் பயனாக தமிழக அரசு 3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பழைய இல்லத்தை அகற்றிவிட்டு புதிய இல்லம் கட்டும் பணிக்கான பூமி பூஜை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் ஜோதி தலைமையில் திருஅருட்பா பாராயணம் செய்யப்பட்டு அகவல் வள்ளலார் முறைப்படி பாடப்பட்டு சிறப்பு வழிபாட்டுடன் பூமி பூஜைக்கான கல் எடுத்து வைக்கப்பட்டது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மற்றும் திமுக வடலூர் நகர மன்ற தலைவர் நகரக் கழக செயலாளர் புவனகிரி நகரக் கழக செயலாளர் ஒன்றிய கழக செயலாளர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிகழ்ச்சியின் இறுதியாக மருதூர் திமுக கிளைக் கழக செயலாளர் மனோகரன் நன்றியுரை ஆற்றினார்.