கோவை ராமானுஜ நகர்,பங்காரு லே அவுட் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அஷ்ட கால பைரவர் கோவிலில் சிறப்பு யாக வேள்வி
திரளான பக்தர்கள் பங்கேற்பு
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அஷ்ட கால பைரவர் கோவிலில் சிறப்பு வேள்வி யாக பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது..
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அஷ்டகால பைரவர் கோவில்களில் சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகின்றன இந்த நாளில் பைரவர் வழிபாட்டிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அஷ்டகால பைரவர் கோவிலில் சௌந்தர் குருசாமி தலைமையில் சிறப்பு யாக பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது பின்னர் காலபைரவருக்கு புனித நீரால் நீராட்டு செய்யப்பட்டு, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
பின்னர் சிவப்பு நிற ஆடை உடுத்தி, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வடை மாலை சாற்றி,கால பைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள்,பெண்கள் என திராளான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை வழிபட்டனர்.
தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது…
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பெரியதம்பி,லயன் செந்தில் குமார்,மாரிச்சாமி,கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்..