திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே காங்கிரஸ் தொழிற்சங்கம் ஜ என் டி யு சி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் தொழிற்சங்கம் ஜ என் டி யு சி திருவாரூர் மாவட்ட தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் தலைமையில், வலங்கைமான் காங்கிரஸ் முன்னாள் நகர தலைவர் கலியமூர்த்தி, வளையமாபுரம் சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு நோட்புக், பேனா, வாய்பாடு வழங்கி, அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் மரக்கன்றுகள் நட்டனர்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இளைஞர் காங்கிரஸ் வட்டார தலைவர் கு. அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.