காஞ்சிபுரத்தில் கழிவுநீர் குடிநீராக மாற்றம் ஏற்பாடுகள் தீவிரம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 360 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கப்பட உள்ளது” சீக்குவன்சிங் பேட்ச் ரியாக்டர் Sequencing batch reactors (SBR) என்ற தொழில்நுட்பத்தின் படி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட உள்ளது.
இது புதிய தொழில்நுட்பம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மிக குறைந்த இடத்திலேயே அமைய உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் நாள் ஒன்றுக்கு, 360 லட்சம் லிட்டர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் அமைய உள்ளது.
5 ஆண்டுகள் வரை தண்டர் விடப்பட்டு, ஒப்பந்ததாரர் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்க வகையில், ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் சுத்திகரிக்கப்பட்ட இந்த தண்ணீரை தொழிற்சாலை மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்த திட்டம் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.