போடி கிருஷ்ணா நகரில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா போடி வட்டார காங்கிரஸ் தலைவர் கண்ணன் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
இவ்விழாவில் போடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் அமைப்பாளர்கள் போடி. சதாசிவம், சன்னாசி மற்றும் நிர்வாகிகள், வார்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
மு. முத்துக்குமார்
டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு
செய்தியாளர்