ராகுல் காந்தியின் 55வது பிறந்த நாள்-துறையூர் நகர காங்கிரஸ் கமிட்டியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
துறையூர்
திருச்சி வடக்கு மாவட்டம் துறையூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர்
ராகுல் காந்தியின் 55 வது பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.துறையூர் நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாளான துறையூர் பேருந்து நிலையத்தில் கலைஞர் சிலை முன்புறம் நகர தலைவர் எஸ்.இராமநாதன் தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர் மாணிக்கம், சிறுபான்மையினர் நகர தலைவர் முகமது பஷீர், முன்னாள் நகர தலைவர் புகழேந்தி, டிவி கண்ணன், கலியமூர்த்தி,நாகராஜ், நடேசன், ரவி, முருகேசன், சொரத்தூர் சேகர், குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்