தேனி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாண வர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்லூரிகள் குறித்தும் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகள் குறித்தும் முழுமையாக தெரிந்து இருப்பதில்லை சிலருக்கு குறைந்த அளவிலான பாடப்பிரிவுகள் குறித்து மட்டுமே தெரியும் மேலும் சில மாணவர்கள் வெளியிடங்களுக்கு சென்று தங்கி பயில தயக்கம் காட்டுவார்கள் உயர் கல்வி தொடர்பாகவும் கல்லூரிகளில் உள்ள இட ஒதுக்கீடு reservation உதவித் தொகைகள் scholarship மற்றும் கல்விக் கடன் குறித்து தெரிந்து கொள்வதன் மூலம் மாணவர்கள் உயர் கல்வி குறித்த சரியான வழிகாட்டுதல்களை பெற முடியும் 15 வருடங்களுக்கு முன்பு உயர் கல்விக்கான வழிகாட்டுதல்கள் மிகக் குறைவாகவே இருந்தது
முயற்சி கொண்டே இருந்தால் நம் இலக்கை அடைந்து வெற்றி பெற முடியும் எதிர்காலத்தில் வெற்றி பெற்றவர்களாக உருவாக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார் இந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமா பிரபா மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்