தேனி மாவட்டம் போடியில் நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் முஸாக் மந்திரி தலைமையில் பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 55 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திரா காந்தி சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்து முழக்கமிட்டனர்… அடுத்தடுத்து வரப் போகும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ராகுல் காந்தி அவர்களை பிரதமராக்க வேண்டும் என்றும் வாழ்த்தி முழக்கமிட்டனர்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சன்னாசி, மாநில இளைஞர் அணி பொது செயலாளர் வினோத், பொதுச் செயலாளர் திருப்பதி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மு. முத்துக்குமார்
டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு
செய்தியாளர்